நோக்கு (Vision)
செம்மொழியாம் தமிழ்மொழியின் பழம்பெருமைகளை மாணாக்கர்களுக்குக் கற்பிப்பதுடன் அவற்றின் வழி சிறந்த சமூகத்தை உருவாக்குவதும் உலகம் முழுவதும் தமிழ்த்துறை மாணவர்களுக்கு உள்ள வேலை வாய்ப்பினை அறிமுகப்படுத்துவதும், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு அவற்றிற்கு இணையாக மற்றும் மேலாக தமிழை மேம்படுத்துவதும் தமிழ்த்துறையின் நோக்கம் ஆகும். தன்னாட்சித் தகுதி பெற்றவுடன் தமிழ்த்துறைப் பாடத்திட்டங்கள் மாணவர்களின் வேலைவாய்ப்பு நோக்கில் மாற்றியமைக்கப்பட்டன.
இலக்கு (Mission)
தமிழியல் கல்வியைப் புதுமைக்கும் உலகமயமாதலுக்கும் ஏற்ப மாற்றி, பல்துறை ஆய்வூக்கமும் செயல்திறனும், நோக்கும் கொண்டதாக புதுமை பாதையில் நடைபோடும் வகையில் சிறப்புற அமைப்பதும், கணினி, இணையம் சார்ந்து மாணவர்கள் அறிவைப் பெறவும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உருவாக வழிகாட்டுவதும்.
மொழி, இலக்கியம், கலை முதலான பண்பாட்டு நிகழ்வுகளைக் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தி அவற்றை ஆவணப்படுத்தி எதிர்காலச் சமூகத்திற்கு வழங்குவதும் தேவையான மரபுகளையும் மனித மதிப்புகளைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும், நனி நாகரிகச் சமூகத்தைக் கட்டமைப்பதும், அனைத்துத் தரப்பு மக்களோடும் இயற்கையோடும் தம் உறவை மேம்படுத்திக் கொள்ள பயிற்சியளிப்பதும் தமிழ்த்துறையின் இலக்காகிறது.