• Home
  • About Us
    • Principal
    • College History
    • List of Principals
    • Milestones
  • Academics
    • Programmes Offered
    • Departments
    • Study Resources
    • Admissions
    • Examination
      • COE
      • Exam Fee
      • Time Table
      • Results
    • UGC-MRP
    • Awards
  • Administration
  • ACCREDITATION
    • UGC
    • NAAC
    • AICTE
    • MHRD
    • NIRF
  • ARIIA
  • IQAC
  • STAFF
  • STUDENTS
Government Arts College Salem-7
  • Home
  • About Us
    • Principal
    • College History
    • List of Principals
    • Milestones
  • Academics
    • Programmes Offered
    • Departments
    • Study Resources
    • Admissions
    • Examination
      • COE
      • Exam Fee
      • Time Table
      • Results
    • UGC-MRP
    • Awards
  • Administration
  • ACCREDITATION
    • UGC
    • NAAC
    • AICTE
    • MHRD
    • NIRF
  • ARIIA
  • IQAC
  • STAFF
  • STUDENTS

Uncategorized

  • Home
  • Blog
  • Uncategorized
  • Parents Teachers Association

Parents Teachers Association

  • Posted by Mahendra Prasath-1
  • Date July 13, 2026
  • Comments 0 comment

 

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம்

பெற்றோர் ஆசிரியர் கழகம்
Parents Teachers Association

ஆண்டு பொதுக்குழுக்கூட்டம்

நாள்: 20.02.2026
இடம்: திருவள்ளுவர் அரங்கம் (அ.எண் 40)

அறிமுகம்
தீர்மானங்கள்
பிற செலவினங்கள்
நிதி நிலவரம்

01

அறிமுகம்

கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டு அரசு வழிகாட்டுதலின்படி பதிவு செய்யப்பட்டு, மாணவர் மற்றும் ஆசிரியர் நலன் பேணும் அமைப்பாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் ஜா.பிரேமலதா தலைவராகவும், புவியியல் துறைத்தலைவர் முனைவர் பெ. அருள் செயலராகவும், புவிஅமைப்பியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் ந.விஜயகுமார் துணைத்தலைவராகவும், ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் த. கங்காதரன் அவர்கள் இணைச்செயலராகவும், புவிஅமைப்பியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் வ. திருமுருகன் பொருளாளராகவும், பெற்றோர் சார்பு உறுப்பினர்களாக திரு உலகநம்பி இணைச்செயலராகவும், திருமதி. தனலட்சுமி இணைத்தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாணவர் நலனுக்காக 17 வருகை விரிவுரையாளர்கள், 1 ஆய்வக உதவியாளர், 1 குறியீட்டாளர், 1 தட்டச்சர், 11 தூய்மை பணியாளர்கள், 1 இரவு காவலர், 1 நூலக உதவியாளர், 1 உதவியாளர் எனத் தொகுத்து 34 பணியாளர்கள் மாத மதிப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

நடப்பு கல்வி ஆண்டு (2025–2026)ல் மேற்கொள்ளவுள்ள பணிகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெற்றிடவும், சேர்க்கையின்போது பெறப்பட்ட சந்தா தொகை, பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், மற்றும் கல்லூரி கட்டமைப்பு மற்றும் விழாக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், கடந்த ஆண்டு செலவினங்களுக்குப் பின் ஏற்பு பெறவும் இப்பொதுக்குழுவின் ஒத்துழைப்பையும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் செயலாளர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

02

தீர்மானங்கள்

1

புதிதாகத் தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளான புவியியல், புவிஅமைப்பியல் மற்றும் புள்ளியியல் துறைகளுக்கு, தமிழ், வரலாறு, பொருளியல், இயற்பியல், தாவரவியல், கணிதம் ஆகிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களிலிருந்து ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, ஏற்கெனவே பணிபுரிந்து வரும் 7 கௌரவ விரிவுரையாளர்கள் தவிர மேலும் 10 ஆசிரியர்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை பொதுக்குழுவிடம் வேண்டுகிறோம்.

2

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வழங்கப்படும் ஊதிய உயர்வின்படி, 2025–2026ஆம் ஆண்டில் கௌரவ விரிவுரையாளர்களாகப் (14 பேர்) பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பூதியமாக ரூ. 10,000/‑ம், நீண்டகாலமாகப் பணிபுரியும் ஒருவருக்கு மட்டும் ரூ. 11,000/‑ம், தூய்மை பணியாளர்கள் (17 பேர்) ஒவ்வொருவருக்கும் ரூ. 1,000/‑ம், சம்பளம் மற்றும் வங்கி தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் அலுவலக பணியாளருக்கு ரூ. 1,000/‑ம் உயர்த்தி வழங்கிடவும் இப்பொதுக்குழுவின் அனுமதி வேண்டப்படுகிறது.

3

தென்மேற்கு பருவமழைக்குப் பின் 26 ஏக்கர் வளாகத்தில் ஏற்பட்ட களைச்செடி ஆக்கிரமிப்பு, மேடுபள்ள நிலப்பரப்பு, மற்றும் நீர்த்தேக்கத்தால் ஏற்பட்ட சுகாதாரச் சிக்கல்களை தூய்மை பணியாளர்கள் கடின உழைப்பால் சரிசெய்து, துறைகளுக்குச் செல்லும் பாதைகளை பயன்பாட்டிற்கு ஏற்றவாறு அமைத்த அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஆட்சி மன்றக் குழுவின் ஒப்புதலுடனும் செயற்குழுவின் முடிவின்படியும் அவர்களது ஜனவரி மாத ஊதிய உயர்வு டிசம்பர் மாதமே முன்கூட்டி வழங்கப்பட்டது.

4

பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதி ஆதாரமான மாணவர் சந்தாத் தொகையை, தற்போதுவரை சேர்க்கை ஆண்டில் மட்டும் பெற்று வந்த நிலையிலிருந்து எளிமையாக்கி, ஆட்சி மன்றக் குழுவின் பரிந்துரை மற்றும் செயற்குழுவின் முடிவின்படி இளநிலை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களிடமிருந்து தலா ரூ. 700/‑ம், முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களிடமிருந்து ரூ. 1,000/‑ம் கூடுதலாகப் பெற்றுக்கொள்ள இப்பொதுக்குழுவின் ஒப்புதல் வேண்டப்படுகிறது.

03

பிற செலவினங்கள்

# விவரம் தொகை (₹)
1 கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகளுக்காக புதுப்பிக்கப்பட்ட திருவள்ளுவர் அரங்கம் (அ.எண் 40) அறைக்கு குளிரூட்டி பொருத்துதல் 59,100
2 துறைகளுக்குத் தண்ணீர் டிரம் மற்றும் சில்வர் குடங்கள் வழங்குதல் 89,020
3 ஆகஸ்ட் 15 மற்றும் பொங்கல் (ஜனவரி 26) விழாக்கள் 35,500
4 சேர்க்கை பணிகள், முதல்வர் & கல்லூரி அலுவலகம், YUMIS பணிக்காக கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியம் 54,000
5 கல்லூரி மேலாண்மை, சுற்றுச்சூழல் மற்றும் பிற செலவுகள் —
6 கல்லூரி செப்டிக் டேங்க் கிளீனிங் (32 × 1,500) 48,000
7 கல்லூரி பிரதான வாயில் மற்றும் மரவனேரி சாலை வாயில் மராமத்து பணிகள் மற்றும் வண்ணப்பூச்சு —
8 கழிவறைகள் மற்றும் கழிவுநீர்ப் பாதைகளின் அடைப்பு நீக்கம் & பிளம்பிங் பழுதுபார்க்கும் பணிகள் —
9 “மாபெரும் தமிழ் கனவு — உலகம் உங்கள் கையில்” மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கும் அரசு விழா செலவினம் —
10 தர்மபுரி இணை இயக்குநர் அலுவலகப் பணிகள், அரசுத் திட்ட தொடக்க விழாக்கள், சாலை பாதுகாப்பு & வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்வுகள் —
தொகை குறிப்பிடப்பட்ட உருப்படிகளின் மொத்தம் 2,85,620

04

நிதி நிலவரம்

1 மார்ச் 2025 கையிருப்பு
₹ 44,97,171.51
ஆண்டின் தொடக்க இருப்பு
16 பிப்ரவரி 2026 கையிருப்பு
₹ 49,86,786.51
நடப்பு வங்கி இருப்பு

வருவாய் — மார்ச் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை

சந்தா (1,902 × ₹1,000) 19,02,000
சந்தா (404 × ₹1,500) 6,96,000
வட்டி மற்றும் M.Phil / Ph.D வருவாய் 6,32,051
மொத்த வருவாய் 32,30,051

செலவினம் — அதே காலப்பகுதி

மாத ஊதியம் (8 மாதம் × ₹1,89,885) 17,08,965
ஊதிய உயர்வுக்குப் பின் (2 மாதம் × ₹2,81,000) 5,63,600
பிற செலவினங்கள் 4,67,871
மொத்த செலவினம் 27,40,436
2026–27 எதிர்பார்ப்பு

டிசம்பர் மாத ஊதிய உயர்வு மற்றும் புதிதாக 8 நபர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக, தற்போது பணிபுரியும் 32 நபர்களுக்கான மாத மதிப்பூதியச் செலவு ரூ. 2,81,000/‑ ஆக உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் 2026–27ஆம் ஆண்டில் மதிப்பிடப்படும் செலவினங்கள்:

₹25,29,000
ஊதிய உயர்வுக்கு முன்
₹8,91,000
ஊதிய உயர்வுக்குப் பின் கூடுதல்
₹40,30,000
கூடுதல் இதர செலவினங்களுடன் மொத்தம்

இப்பொதுக்குழுவின் ஒத்துழைப்பையும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் வரவேற்கிறோம்.
செயலாளர், பெற்றோர் ஆசிரியர் கழகம்
  • Share:
author avatar
Mahendra Prasath-1

Previous post

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான “உயர்கல்வி வழிகாட்டல் - கல்லூரி களப்பயணம்”
July 13, 2026

You may also like

GACSLM7-School students
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான “உயர்கல்வி வழிகாட்டல் – கல்லூரி களப்பயணம்”
26 February, 2023
Zoo invitation-1
13-2-2023 – DEPARTMENT OF ZOOLOGY ORGANIZE A SPECIAL INVITED LECTURE ON COVID-19 – A NEW AVENUE
12 February, 2023
scsdp
8-2-2023 – IQAC organizes STUDENT COMPUTER SKILL DEVELOPMENT PROGRAMME
8 February, 2023

Leave A Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

logo-eduma-the-best-lms-wordpress-theme

0427-2413273

principalgacslm7@yahoo.co.in

Who we are

Government Arts College, Maravaneri, Salem is the oldest higher education institution in Salem District. It was improved as an Anglo-Vernacular School in 1857 by A.J. Alexander Arbuthnot…

More about us

Quick Links

  • Organogram
  • Principal
  • Results
  • Time Table
  • ALUMNI

Government Arts College (Autonomous),Salem-636007