தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம் நமது கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரத்தை செயல்படுத்தும் வகையில் மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ள தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் அக மதிப்பெண் மற்றும் புற மதிப்பெண்களை OMR தாள்கள் மூலம் பெற்று தேர்வு முடிவுகள் துரிதமாக வெளியிடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று ஊரடங்கின் பொழுதும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம் மாணவர் நலன் கருதி அரசு வெளியிட்ட வழிகாட்டுதலின்படி ஆன்லைன் மூலம் தேர்வுகளை குறித்த காலத்தில் நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தேர்வுப் பணிகளோடு கல்லூரியின் அனைத்து துறைகளின் பாடத்திட்டக் குழு, கல்லூரியின் கல்விக்குழு, நிதிக்குழு மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் நியமனம் அவர்களின் பதவிக்காலம் ஆகியவற்றைக் கண்காணிப்பதும் வருடாந்திர கூட்டங்கள் நடத்த தேவையான தரவுகளை ஆராய்ந்து வகைப்படுத்தி கல்லூரியின் வளர்ச்சிக்கு தேவையான தீர்மானங்களாக நிறைவேற்றுவதற்கும் கல்லூரி முதல்வர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகிறது.